அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

Photo of author

By Janani

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

Janani

1. எந்தெந்த நாட்களில் ஜாதகம் பார்க்க கூடாது? :

*ஜாதகம் பார்க்க செல்வதற்கு முன் நம்முடைய ஜாதகத்தை வீட்டில் உள்ள சாமி படத்திற்கு முன் வைத்து சகுனம் மற்றும் நல்ல நேரம் பார்த்த பிறகு தான் ஜாதகம் பார்க்க செல்ல வேண்டும்.

*எமகண்டம், ராகு காலம் போன்ற காலங்களில் ஜாதகம் பார்ப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பக் கூடாது. இந்த காலங்களில் ஜாதகம் பார்க்கும் இடத்திற்கும் செல்லக்கூடாது.

*கரிநாள், சூரிய அஸ்தமன நேரம், அஷ்டமி, நவமி, பிரதமை, கிருத்திகை, பரணி, ஆயில்யம், கேட்டை, பூரம் ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களிலும் ஜாதகம் பார்க்க செல்லக்கூடாது.

2. பொதுவான ஆன்மீக தகவல்கள்:

*செய்வினை உள்ள வீட்டில் பல்லிகள் தங்காது.
*விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி போட வேண்டும்.
*பாவத்தை போக்குவதற்கு இறைவழிபாடும், தர்மமும் செய்ய வேண்டும்.
*மருதாணி விதையால் தூபம் போட்டால் நமது வீட்டில் உள்ள பில்லி சூனியம் மிரண்டு ஓடிவிடும்.
*மருதாணியை கையில் வைத்த ஒருவரிடம் ஆறு நாட்களுக்கு எமன் அருகில் நெருங்க மாட்டான்.
*மருதாணி பூக்களை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
*பிரை தரிசனம் கண்டால் முற்பிறவி பாவத்தை போக்கும்.
*விரைவில் திருமணம் கைகூட, வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு உகந்த வெண்ணிற ஆடையை அணியலாம்.

3. வெள்ளிக் கிழமையில் செய்யக் கூடாதவை:

*பெரியவர்கள் கூறுவது போல வீட்டின் உள்பகுதியில் நகங்களை வெட்டக்கூடாது.
*செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் முடி வெட்டக் கூடாது.
*குபேரனுக்கும், மகாலட்சுமிக்கும் உகந்த வெள்ளிக் கிழமைகளில் பூஜை அறையை அலங்கோலமாக வைத்திருக்கக் கூடாது.
*வெள்ளிக்கிழமையில் வீட்டை கழுவினாலும், ஏதேனும் ஒரு பொருளை வெளியேற்றினாலும் நமது வீட்டில் குடியிருக்கும் மகாலட்சுமி வெளியேறி விடுவார்.

4. சாஸ்திரப்படி செய்யக் கூடாதவை:

*நாம் உபயோகித்த பழைய துணிகளை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
*இரவு நேரத்தில் மரத்தின் அடியில் படுத்து உறங்க கூடாது.
*நம் வீட்டுக் குழாயில் தண்ணீர் சொட்டக் கூடாது.
*வாசக்கால், கதவு, ஜன்னல் ஆகியவற்றை கரையான் அரிக்கக் கூடாது.
*தலையணை மீது உட்கார கூடாது.
*தலைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது.
*துடைப்பத்தை மிதிக்கவோ தாண்டவோ கூடாது.
*ஈரத் துணியுடன் பூஜை செய்யக் கூடாது.
*பெண்கள் வாழை மரத்தை வெட்டக் கூடாது.

5. வீட்டில் செல்வ செழிப்பு பெற..! மகாலட்சுமிக்கு பிடிக்காதவை..!

*உப்பையும் மஞ்சளையும் அருகருகே வைக்காதீர்கள். அது குழப்பத்தை உண்டாக்கும்.
*சமையல் அறையில் பெண்கள் ஒருபோதும் கண்ணீர் சிந்த கூடாது.
*வீட்டில் சமையல் அறை என்பது கோவிலை போல சுத்தமாக இருக்க வேண்டும்.
*சமையலறை தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் இல்லாவிட்டாலும் அடுப்பையாவது அந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்.
*உப்பும், அரிசியும் வீட்டில் குறையாமல் இருந்தால் தரித்திரம் ஏற்படாது.
*வீட்டில் எப்போதும் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. இந்த பொருள் வேண்டும் என்று கேட்க வேண்டும்.