VCK BJP NTK TVK: தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் வேகமெடுத்துள்ளது. இதனை மேலும் பரபரப்பாக்கும் வகையில், தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானது விஜய்யின் அரசியல் வருகை. விஜய் கட்சி துவங்கியது முதலே அவருக்கு பெருமளவில் ஆதரவு எழுந்து வருகிறது. மேலும் விஜய் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் ஆரம்பத்திலேயே கூறி விட்டார். விஜய் மட்டுமல்லாது, சீமானும் திமுகவை அரசியல் எதிரியாக கருதி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் விஜய் தனது எல்லா உரைகளிலும் பாஜகவை விமர்சிக்காமல், திமுகவை மட்டுமே விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பாஜகவின் தற்போதைய கொள்கையாக இருப்பது தமிழகத்தில் திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே. இதனால் இவர்கள் இருவரும் பாஜகவின் மூலம் திமுகவை எதிர்பதற்காக கட்சி ஆரம்பித்தனர் என்ற கருத்து வலுப்பெற்றது. இந்நிலையில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக அக்கட்சியில் நிலவியுள்ள பிரிவுகள் மூலம் மக்கள் அதிமுக மேல் அதிருப்தியில் உள்ளதை அறிந்தது.
இதனால் இந்த முறையும், திமுக ஆட்சிக்கு வந்து விடுமோ என்ற பயத்தினால், விஜய் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்த உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறினர். சீமான் ஏற்கனவே திமுகவை எதிர்த்து வரும் நிலையில் தற்போது அதன் மவுசு குறைந்து விட்டது, அதனால் பாஜகவின் மற்றொரு குழுவாக தவெக களமிறங்கியுள்ளது என விசிகவின் துணை பொது செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார். இவரின் இந்த கூற்று உண்மையானது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

