NTK: திருச்சி எஸ்.பி வருண்குமார் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் சீமான்.
சண்டிகர் மாநிலத்தில் ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும் போது நாம் தமிழர் கட்சி பற்றி பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது.
அதாவது, தேசிய புலனாய்வு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் சோதனை செய்து இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம், அந்த கட்சியினால் நானும் எனது குடும்பமும் இணையக் குற்றத்தினால் பாதிக்கப் பட்டு இருக்கிறோம் என்று குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும் இது போன்ற இணைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என பேசி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். இன்று கோவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான் எஸ்.பி வருண்குமார்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். அதில் நாம் தமிழ் கட்சி பிரிவினைவாத இயக்கமா? என கேள்வி கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகிறது.
தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து இருக்கிறோம். தமிழ் மொழி தமிழர் என பேசினால் பிரிவினைவாதமா? என்று கேட்டு இருக்கிறார். மேலும் மோதி பார்க்க வேண்டும் என ஆகி விட்டால் மோதி பார்க்க வேண்டும் என சவால் விடுத்து இருக்கிறார்.