என்னை விட்டால் உங்களுக்கு வேறு நாதி இல்லை! சீமான் அதிரடி!

Photo of author

By Sakthi

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை மண்ணடி தம்பு செட்டி வீதியில் நடந்து வரும் முத்துக்குமாரின் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் தமிழர்கள் இன பற்றுடன் இருக்க வேண்டாம், ஆனால் இனவெறியுடன் இருக்கவேண்டும். அடிபணிந்து செல்வது போன்ற பழக்கங்கள் எங்களுடைய பரம்பரையில் சுத்தமாக கிடையாது. இஸ்லாமிய சங்கங்கள் ,இஸ்லாமிய மக்கள் அவர்கள் எதற்காக காகிதம் இல்லத்தை தொடர்பாக பேசுவதற்கு பயம் கொண்டு இருக்கிறார்கள். ஸ்டாலின் அவர்களுக்கு காகித மில்லத் தொடர்பாக என்ன தெரியும். அவரை என்னிடம் வந்து ஒரு ஐந்து நிமிடம் பேச சொல்லுங்கள் பார்க்கலாம் அவருக்கு பேச தெரியாது நாட்டுடைய மிகச்சிறந்த சிறுபான்மையினர் கருணாநிதி, மற்றும் ஜெயலலிதாதான் இந்திய நாடு யாருடையது முதலில் நாம் சிறுபான்மையினர் கிடையாது பெரும்பான்மையான மக்கள் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். மதத்தை மாற்றிக் கொண்டு மொழி இனம் மாறாது என்று தெரிவித்தார்.

முருகனை சிக்ஸ் பேக்குடன் ஓவியம் வரைவேன் நான் முருகப்பெருமான் எவ்வாறு இருப்பார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். சிறுபான்மை இனம் என்பது சலுகை கிடையாது. அது நம்முடைய உரிமை. நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்து வந்தது. என்னை பாஜகவின் பி.டீம் என்று தெரிவிக்கிறார்கள் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே எனக்கு எதிரி கட்சிகள்தான் தான். எனக்கு இந்திய கட்சிகள் தேவையில்லை. தமிழ் நாட்டை ஆள்வதற்கு மாநில கட்சி தான் வேண்டும் பாஜகவுடன் எப்பொழுதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஸ்டாலின் அவர்கள் உறுதிப்பட தெரிவிக்க முடியுமா ?அதேபோல ஈழத்தில் தமிழ்நாட்டு மக்களை கொன்று குவிப்பதற்கு உதவி புரிந்த நாடு இந்திய நாடு எதிர்வரும் தேர்தலில் எல்லோரையும் வீழ்த்துவோம் காங்கிரஸ் கட்சி தமிழ் இனத்தின் எதிரி பாஜக மானிடர்களின் எதிரி என்று தெரிவித்தார் சீமான்.

ஸ்டாலின் அவர்களால் பணம் கொடுக்காமல் ஒரு கூட்டத்தை ஒன்று சேர்க்க இயலுமா? கிராம சபை கூட்டத்தை கூட பணத்தால் அடித்துதான் கூட்டியிருக்கிறார். எதுவுமே இல்லாத பாஜகவை கூட ஒரு கூட்டமாக வைத்தது திமுக தான் .என்னை அந்தக் கட்சியின் பி.டீம் என்று தெரிவிக்கிறார்கள் ஆனால் திமுக தான் தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜகவிற்கு மெயின் டீம் .திமுக காங்கிரஸ் மற்றும் பாஜக இன்று மூன்று கட்சிகளுக்கும் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது என்று தெரிவித்தார் சீமான்.