விஜய் கூறுவது கொள்கை அல்ல கூமுட்டை தனம்!!  அட்டாக் ஸ்பீச்சில்   சீமான்!!

Photo of author

By Sakthi

Politics: விஜய்யின்  தவெக கட்சி கொள்கைகளை கடுமையாக விமர்சனம்  செய்தார் சீமான்.

நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் தேசிய வாதிகள் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள தவெக கட்சி தலைவர் விஜய்யின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு  பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பும் ஆதரவும்  தெரிவித்து இருந்தார்கள்.

அந்த  வகையில் சீமான்  தமிழ்நாடு நாள் பொது கூட்டம் நிகழ்ச்சியில் மறைமுகமாக தவெக கட்சி பற்றி கூறுகையில் ” தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல. வரலாற்றை கற்பிக்க வந்தவன்” என்றும்  இது சினிமா பஞ்ச் டயலாக்  இல்ல தம்பி. நெஞ்சு டயலாக் இது.

மேலும்  தமிழ் தேசியத்திற்கு நேர் எதிர் தான் திராவிடம். மேலும் “எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது.” என கடுமையாக விமர்சனம் செய்தார் சீமான். மேலும் விஜய் கூறுவது கொள்கை அல்ல கூமுட்டை என கூறினார்.

மேலும் திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்பது கொள்கை அல்ல என்று கூறினார். தவெக முதல் மாநில மாநாடு நடைபெறுவதற்கு  முன்பு வரை விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.