ரஜினியும் சீமானும் ஒன்றிணைகிறார்களா! சீமானின் பேச்சால் பரபரப்பு!

Photo of author

By Sakthi

வயது மூப்பு காரணமாக ஓய்வு தேவைப் படுவதால் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது அவர் அரசியலுக்கு வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று சீமான் தெரிவித்திருக்கின்றார்.

தன்னுடன் வேலை காரணமாக அரசியலுக்கு வர இயலாது என்பதை நடிகர் ரஜினிகாந்த் வேறுவிதமாக தெரிவித்து இருக்கின்றார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

ஒருபுறம் அரசியல் கட்சிகள் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறமோ ரஜினி ரசிகர்கள் தலைவரை எப்படியாவது அரசியலில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று சுவரொட்டிகளை ஒட்டியும், ட்விட்டரில் ட்ரெண்டாக்கியும், வருகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவிக்கையில், அவருக்கு ஓய்வு தேவைப் படுவதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நன்று எனவும், அவர் வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

புகழை மட்டுமே எதிர்பார்த்த ரஜினியால், தமிழ்நாட்டில் மிக மோசமான ஆட்டம் நடந்து கொண்டிருப்பதாகவும் அரசியல் என்ற சதுரங்கத்தில் ரஜினியை இறக்கி விடுபவர்களை அவரை இழிவாக பேசும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.