ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில் பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை! கெத்து காட்டும் சீமான்

0
321
Seeman-News4 Tamil Online Tamil News
Seeman-News4 Tamil Online Tamil News

ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில் பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை! கெத்து காட்டும் சீமான்

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டுமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிவந்தார்கள். ஆனால் திராவிடர் என்பதும் திராவிடம் என்பதும் தமிழ்ச் சொல்லே இல்லை.

அது சமஸ்கிருதச் சொல். அப்புறம் தமிழர் என்று கூறினால் பிராமணர்களும் தமிழர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்று கூறினார்கள். ஆனால், தமிழர்கள் என்றால் இவர்கள் உள்ளே வரமுடியாது என்பதால் திராவிடம் என்று சொல்லி அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள். இப்போது நடுமண்டையில் ஏறி ஓங்கி அடித்ததும், திராவிடம் என்றவர்கள் எல்லாம் தெறித்து ஓடிவிட்டார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என்றார்.

ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப் புலிகள் காரணம் எனக் கூறப்பட்டாலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதுவரை அந்தக் குற்றத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமான் இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில் பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை! கெத்து காட்டும் சீமான்

இதற்கிடையே, சீமானின் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் அவர் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்களை அடுத்து சீமான் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மீண்டும் பேசியுள்ள சீமான் “ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் எனப் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை. 25 ஆண்டு காலமாக இதைத் தான் பேசி வருகிறேன். காங்கிரஸார் போராடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. எந்த விஷயத்துக்காக இதுவரையில் காங்கிரஸ்காரர்கள் போராடியுள்ளனர்.

இப்போது என்னை சிறையில் தள்ள காங்கிரஸ் போராடி வருகிறது. உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியே எடுத்துவிட்டு என்னை உள்ளே தள்ளப் போராடுகிறார்கள். 28 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்திருப்பதை எப்படி பொறுத்துக் கொள்வது. இந்த விவகாரத்தில் விவாதத்துக்குத் தயாராக உள்ளேன். இலங்கையில் இந்திய அமைதிப்படை என்ன செய்தது என்பதை விவாதிக்க வருவார்களா அவர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleபிகில் படத்துக்கு தடை வருமா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Next articleஇமயமலையில் ரஜினியுடன் ‘கிளிக்’கிய ரசிகர்கள்! வைரலாகும் போட்டோக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here