இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்!

0
95

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற இருக்கிறது இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூன் மாதம் 13 மற்றும் 16 19, 22, 24, 26, ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

போட்டிகளும் ஒரே இடத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கின்றது. அதோடு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்த போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, மயங்க் அகர்வால், சுப்மன்கில், முகமது ஷமி ரவீந்திர ஜடேஜா அஷ்வின், முகமது சிராஜ், போன்ற முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் பிசிசிஐ அறிவித்திருக்கின்றது. இதன்படி இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் அவர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

35 வயதான ஷிகர் தவான் கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தற்சமயம் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் ரன் குவிப்பில் 380 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் தற்போதைய தனித்தேர்வுக்கு இருக்கின்ற வீரர்களின் மூத்த வீரர் ஷிகர் தவான் தான் இந்திய அணிக்காக கடந்த இரு வருட காலமாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது எல்லோராலும் பாராட்டப் படுகிறது.

இலங்கை செல்லும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வருமாறு ஷிக்கர் தவான் புவனேஸ்வர் குமார், தேவ்நெட் படிக்கல், ருதுராஜ், கெய்ங்க்வாட், சூரியகுமாரி யாதவ் மணிஷ் பாண்டே ஹர்திக் பாண்டியா நிதிஷ் ரானா, இஷான்கிஷன், சாம்சங் ஆர் சாகர், கே கவுதம்,குர்னல் பாண்டியா,குல்தீப் யாதவ்,தீபக்சாகர்,நவ்தீப்சைனி,சி.சகரியா.

Previous articleபிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!
Next articleடிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்!