அரசியலில் இதெல்லாம் சாதாரணம்! கூலாக பதில் சொன்ன செல்லூர் ராஜு!

Photo of author

By Sakthi

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாகவே விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று தான் என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கின்றார்.

மதுரையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் கைகாட்டும் கட்சிதான் ஆட்சியில் அமரும் என்று முருகன் தெரிவித்திருப்பது சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் விமர்சனம் செய்வது வழக்கமானதுதான்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சியினர் தற்போது நண்பர்களாக தான் இருக்கிறார்கள். தங்களுடைய கட்சி மக்களிடையே பிரபல படுத்தும் முயற்சியாகவே முருகன் இதை தெரிவித்து இருக்கின்றார் என்று தெரிவித்தார்.

அதற்கு முன்பாக நேற்றைய தினம் திருவொற்றியூரில் யாத்திரையில், பங்கு பெற்ற எல். முருகன் அடுத்த அமையவிருக்கும் ஆட்சியை தீர்மானிக்கப் போவது பாஜகதான் எதிர்வரும் தேர்தலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.