செமஸ்டர் தேர்வுகள் அதிரடியாக ரத்து;!துணை முதல்வர் டுவிட்! மகிழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள்!!

Photo of author

By Pavithra

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து இதுவரை எந்தமுடிவும் அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை.

டெல்லியில் பல்கலைகழக இறுதி ஆண்டு தேர்வுகள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என அம்மாநில பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருந்தது.ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி மாநில அரசியல் தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோசிடியா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்,கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள்,இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைகழகம் அளிக்கும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் எனத் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.