செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி குடும்பத்தாரின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! 

Photo of author

By Sakthi

செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி குடும்பத்தாரின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!
செம்மண் குவாரி வழக்கு வக்கு தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் குடும்பத்தாருடைய 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை தற்பொழுது முடக்கியுள்ளது.
தமிழக அரசில் தற்பொழுது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் பொன்முடி அவர்கள் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் கனிமவளத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொழுது அமைச்சர் பொன்முடி அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூத்துறையில் இருக்கும் செம்மண் குவாரி உள்பட 5 செம்மண் குவாரிகளை தன்னுடைய மகன் பெயரிலும், பினாமி பெயரிலும், உறவினர்களின் பெயரிலும் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து 5 செம்மண் குவாரிகளை எடுத்து அதிகமாக செம்மண் எடுத்ததால் தமிழக அரசுக்கு 25 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. இதற்கு காரணம் அமைச்சர் பொன்முடி தான் கூறப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கௌதம சிகாமணி, உறவினர் கே.எஸ் ராஜமகேந்திரன் ஆகியோர் மீது கடந்த 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2012ம் ஆண்டு வழக்கை அடிப்படையாக வைத்து அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பறிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தது. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி 2 நாட்கள் விசாரணையும் செய்தது.
அமைச்சர் பொன்முடி அவர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் அமலாக்கத்துறை “செம்மண் குவாரி மூலமாக ஈட்டிய பணத்தை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் ஹவாலா மூலமாக சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளார். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.
13 லட்சம் மதிப்புள்ள பிரிட்டன் பவுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 81,70,000 ரூபாயும் கைப்பற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் அமைச்சர் பொன்முடி அவர்களின் வங்கியில் உள்ள 41.90 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் முடக்கப்பட்டுள்ளது” என்று அமலாக்கத்துறை கூறியது.
இதனையடுத்து அமலாக்கத்துறை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடி அவர்களின் மீது 90 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி அவர்களிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று(ஜூலை27) அமைச்சர் பொன்முடி அவர்களின் உறவினர்களுடைய 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று(ஜூலை26) “அமைச்சர் பொன்முடி அவர்களின் செம்மண் குவாரி வழக்கில் அடுத்தகட்டமாக அமைச்சர் பொன்முடி அவர்களின் மகன் கௌதம சிகாமணி அவர்களின் உறவினர் கே.எஸ் ராஜமகேந்திரன் அவர்களுக்கு சொந்தமான சுமார் 4.57 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கியுள்ளோம்.
மேலும் அமைச்சரின் மகன் கௌதம சிகாமணி அவர்களின் மனைவி பெயரில் இருக்கும் வங்கிக் கணக்கு, பின்னர் நிரந்தர வைப்பு நிதி 8.74 கோடி என்று மொத்தமாக 14.21 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளோம்” என்று அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.