தி.மு.கவின் கோட்டைக்குள் புகுந்த குஷ்பு! நடுக்கத்தில் திமுக தலைமை!

0
111

சென்ற காலங்களில் சென்னை முழுவதுமே திமுகவின் கோட்டை என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்கள். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி போன்ற பகுதிகள், இன்று வரையில் திமுகவின் கோட்டையாக தான் இருந்து வருகின்றது 1977 முதல், 2016 வரை இடையில் 91- 96அந்த காலகட்டத்தை தவிர்த்து முப்பத்தி எட்டு வருடங்களாக அந்த பகுதிகளின் திமுகதான் கெத்து என தெரிவிக்கிறார்கள்.

தமிழ் நாட்டிலேயே மிகச் சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம், தற்போது மறுசீரமைப்பு செய்த காரணத்தால், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி மாறிப்போனது கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் ஜெ. அன்பழகன் தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றார். அன்பழகன் மறைவிற்குப் பின்னர் அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது .இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்துவிட்டது.

234 தொகுதிகளில் 228 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கின்றது. பாரதிய ஜனதா அதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பூ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வேட்பாளரை விடவும் தேர்தல் பொறுப்பாளர்கள் தான் முக்கியமானவர்கள் என்று தமிழக பாரதிய ஜனதாவின் தலைவர் முருகன் நேற்றையதினம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Previous articleஇந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 17-12-2020 Today Rasi Palan 17-12-2020
Next articleமேலும் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அறிவிப்பு!