
ADMK: எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்களின் நம்பிக்கை குறியவராகவும், அதிமுகவின் முகமாகவும் அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். இவர்களின் இறப்பிற்கு பிறகு இபிஎஸ் பதவியேற்றார். அப்போதிலிருந்தே கட்சியில் செங்கோட்டையனுக்கான மவுசு குறைய தொடங்கியது. இதனால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தால், அவருக்கான ஆதரவு பழைய நிலைக்கு திரும்பும் என்று நினைத்த செங்கோட்டையன் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி கட்சியின் உள்விவகாரங்களை பொதுவெளியில் பேசியதாக கூறி செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். ஆனாலும் 10 நாள் கெடு தொடரும் என்றே செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்ட கழக பணிகளை மேற்கொள்வதற்காக ஏ.கே செல்வராஜ் எம்.எல் நியமிக்கப்படுவதாக இபிஎஸ் கூறியிருந்தார்.
தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு பதிலாக யாரை நியமிக்கலாம் என்று இபிஎஸ் தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இந்த பகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. பாஜகவிலிருக்கும் முக்கிய நபர் ஒருவருக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. கோபிச்செட்டி பாளையத்தில் செங்கோட்டையன் தனது வலுவான தடத்தை பதித்திருப்பதால், புதிய வேட்பாளரை அப்பகுதி மக்கள் ஏற்பார்களா என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. இதனால் அதிருப்தியடைந்த செங்கோட்டையன் தன்னுடைய அடுத்த கட்ட நகர்வில் தீவிரம் காட்டி வருகிறார்.