பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்ட அமைச்சர்! மாணவர்களே எல்லாரும் ரெடியா இருங்க!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக தமிழக முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிடுவார், என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் எதிர்வரும் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சுமார் 25 சதவீதத்திற்கும் குறைவான பெற்றோர்கள் மட்டுமே பங்குபெற்றனர்.

அதோடு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, ஆகியோர் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக நாளை மறுநாள் தமிழக முதல்வர் ஒரு முடிவை அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார்.