TVK: அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விறுவிறுப்பை மேலும் மெருகேற்றும் வகையில் தமிழ் திரையுலகின் மிக பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறார். அண்மை காலமாகவே விஜய் பற்றிய செய்தி தான் அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியை உள்ளது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் 2026 தேர்தல் முடிவுகளில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் கட்சியில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கூறியதற்காக இபிஎஸ் அவரை கட்சியை விட்டு நீக்கினார். இதற்கு பின் செங்கோட்டையனின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற விவாதம் அரசியல் களத்தில் எழுந்தது. இந்நிலையில் இவர் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி பரவியது.
இந்த தகவலுக்கு விஜய் தரப்பிலிருந்தும், செங்கோட்டையன் தரப்பிலிருந்தும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் இவர் தவெகவில் இணைய போகிறார் என்பது உறுதி என கூறப்பட்டது. இதனை மேலும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தவெகவை சேர்ந்த நிர்மல் குமார் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு அதனை பற்றி பிறகு பேசலாம் என்று. பதிலளித்துள்ளார். இந்த கருத்து செங்கோட்டையன் தவெகவில் இணைய போகிறார் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என்றே பார்க்கப்படுகிறது.

