TVK CONGRESS: அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என, தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால், செங்கோட்டையன் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தலைமைக்கு எதிரானவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 1 மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்திலும் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பின்னர், செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தவெகவில் இணைந்த இவர், தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையிலெடுத்துள்ளார். அதிமுக, திமுக வினுடைய கூட்டணிகள் ஓரளவுக்கு உறுதியான நிலையில், தவெக உடனான கூட்டணி மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. விஜய், கட்சி ஆரம்பித்தது முதல் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பார் என்ற குரல் ஓங்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே காங்கிரஸ் தலைவர்களும் நடந்து கொண்டனர்.
இந்நிலையில் இது உறுதியாகியுள்ளது. தற்போது தவெகவின் முக்கிய தலைவராக அங்கம் வகித்து வரும் செங்கோட்டையன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசை ஒரு சுப நிகழ்ச்சியில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து திருநாவுக்கரசர் விளக்கம் அளித்த போது, இது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சந்திப்பு. அரசியல் ரீதியானது அல்ல என்று விளக்கம் அளித்தார். ஆனால் இந்த சந்திப்பு கூட்டணி குறித்த அச்சாரமாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு விஜய்-ராகுலின் நட்புறவும், காங்கிரஸ் திமுக கூட்டணியிடம் சில நிபந்தனைகளை முன் வைப்பதும் உதாரணமாக பார்க்கப்படுகிறது.

