ADMK: சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். 10 நாளுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென்றால் என்னைப் போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும் கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.
ஆனாலும், என்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றே செங்கோட்டையன் கூறினார். செங்கோட்டையனின் இந்த செயலுக்கு பிரிந்த தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில், அவருக்கான ஆதரவும் பெருகி வந்தது. பதவிகள் பறிக்கப்பட்ட செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அரசியல் களம் உற்று நோக்கி கொண்டிருந்தது. இந்நிலையில் செங்கோட்டையன் அவரது அடுத்த கட்ட நடவடிக்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், தேவர் ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மலை அனைத்து மரியாதையை செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் ஒன்றாக வந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதையை செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மூவரின் ஒருங்கிணைந்த வருகை, செங்கோட்டையன் கூறிய ஒருங்கிணைப்பு நடவடிக்கையாக இருக்குமோ என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

