TVK ADMK: அதிமுகவின் முக்கிய அமைச்சராகவும், கோபிச்செட்டி பாளையத்தை கோட்டையாகவும் கொண்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், முதலில் அவரது பதவிகள் பறிக்கபட்டது. பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவரது அடுத்த கட்ட நடவடிக்கையை அரசியல் களமே உற்றுநோக்கி கொண்டிருந்தது. அப்போது தான் இவர் தவெகவில் இணைந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
அதிமுகவிலிருந்து இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் தவெகவில் இணைய உள்ளார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி இப்போது கூற முடியாது என்று பகீர் கிளப்பினார். அதற்கான வேளையில் ஈடுபட்டுள்ள செங்கோட்டையன் முதலில், அதிமுகவின் தற்போதைய கன்னியாகுமரி எம்எல்ஏ முத்து கிருஷ்ணணை தவெகவில் இணைத்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடி பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தூத்துக்குடியின் மாவட்ட செயலாளராக இருந்த செல்லப்பாண்டியன், இபிஎஸ்யின் வருகைக்கு பிறகு, அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு டம்மி பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதனால் இவர் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பது அம்பலமானது.
செங்கோட்டையன் முதலில் குறிவைப்பது அதிருப்தி எம்எல்ஏ-க்கள் என்பதால், அவரின் பட்டியலில் அடுத்ததாக இருப்பது செல்லப்பாண்டியன் என்பது தெளிவாகியுள்ளது. செங்கோட்டையன் செல்லப்பாண்டியனிடம் தவெகவில் இணையும் படி கூறியதாகவும், அதற்கு அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நீங்கள் தவெகவில் சேர்ந்த உடன் தூத்துக்குடி மா.செ. பொறுப்பும், எம்எல்ஏ பதவியும் வழங்குவது என்னுடைய பொறுப்பு என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் கூடிய விரைவில் செல்லபாண்டியன் தவெக இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.

