TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் முதலிடம் பிடித்தது திமுக என்றாலும், அதனை பின்னுக்கு தள்ளியுள்ளது தவெக. 50 ஆண்டுகளாக அதிமுகவில் அங்கம் வகித்த வரும், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து விஜய்யின் கட்சியான தவெகவில் இணைந்துள்ளார்.
2 வாரங்களாகவே 27 ஆம் தேதி செங்கோட்டையன் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று விஜய் தலைமையில் அவர் இணைந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தனை வருடங்களாக ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த செங்கோட்டையனுக்கு, தவெகவில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பளார் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரின் இந்த இணைவு அரசியல் களத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. 50 ஆண்டு கால அரசியல் அனுபவமும், 8 முறை எம்எல்ஏ பதவியும் வகித்த செங்கோட்டையன் புதிய கட்சியான தவெகவில் இணைந்தது தவெக பக்கபலமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு பல வருடங்களாக திராவிட வடையை அறிந்த செங்கோட்டையனுக்கு புதிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இந்த செய்தி இபிஎஸ்க்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

