TVK AMMK: 2026 யில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதை தொடர்ந்து, தேர்தல் களமும், மாநில கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திராவிட கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சிறிய கட்சிகளும் வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் தங்களை இணைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் நடிகர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இதனால் விஜய் மீதும் அவரது கட்சி மற்றும் தொண்டர்கள் மீதும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து வலுப்பெற்று வந்த நிலையில், அவருக்கு அரசியல் வழிகாட்டியாகவும், தவெகவின் காட் பாதர்-ஆகவும் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்து இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர் கட்சியில் இணைந்தவுடன் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும் தவெகவில் இணைப்பேன் என்று உறுதி கூறினார். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கையில், மறைமுகமாக டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவின் முக்கிய முகங்களையும் தவெக பக்கம் இழுப்பதற்கான பணியை செங்கோட்டையன் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இன்று ஈரோட்டில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் சில முக்கிய அமைச்சர்கள் இணைவார்கள் என்று கூறப்பட்ட சமயத்தில் அது நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து அமமுகவின் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நாகு மற்றும் அவரது தலைமையிலான அமமுகவினர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வு தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.