TVK AMMK: தமிழகத்தில் நடக்க இருக்க சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி அதனை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். கரூர் பரப்புரையை தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, ஈரோட்டில் விஜய் மக்களை சந்தித்து பேசவுள்ளார். அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக பார்க்கபடுவது, அண்மையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் மற்றும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வகித்து வருகிறார்.
இவர் தவெக சென்ற தினம், அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும், தவெகவில் சேர்ப்பேன் என்று சபதம் எடுத்தார். அந்த வகையில் சில அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், அவர்கள் இன்று ஈரோட்டில் விஜய் தலைமையில், மக்கள் முன்னணியில் தவெகவில் ஐக்கியமாவார்கள் என்று கணிக்கப்படுகிறது. இது குறித்த சமீப காலமாகவே செய்திகள் பரவி வருகிறது. ஆனால் யாரும் அறிந்திராத செய்தி ஒன்று, வெளியாகியுள்ளது. அமமுகவின் முக்கிய முகங்களும், நிர்வாகிகளும் இன்று தவெகவில் இணைய போவதாக பலரும் கூறுகின்றனர். செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், தினகரன், ஓபிஎஸ் உடன் தான் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
இப்படி இருந்த சமயத்தில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது இவர்களுக்கே தெரியாது என்று கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த உடன் இவர்களை மறந்து விட்டார். இனி மேல் இவர்களை எதிர்பார் என்று அனைவரும் கூறி வந்தனர். தற்போது அது உறுதியாகியுள்ளது. இதனால் இவர் அதிமுக அதிருப்தியாளர்களை மட்டும் சேர்ப்பதை நோக்கமாக வைக்கவில்லை. அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களையும் தவெகவில் சேர்ப்பதற்காக மறைமுகமாக பணியாற்றி வருகிறார் என்பதும் நிரூபணமாகியுள்ளது.