அதிமுக முன்னாள் அமைச்சரை லாக் செய்த செங்கோட்டையன்.. கொண்டாட்டத்தில் தவெக!!

0
230
Sengottaiyan who locked AIADMK ex-minister. TVK Enjoy the celebration!!
Sengottaiyan who locked AIADMK ex-minister. TVK Enjoy the celebration!!

ADMK TVK: இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளிலும், தொகுதிப் பங்கீட்டிலும் மும்முரம் காட்டி வருகின்றன. மேலும் முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் கட்சி மாறி வருவது வழக்கமாகிவிட்டது. அதிலும் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் திமுகவில் சேர்ந்து அந்த கட்சிக்கு வலிமையை கூட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் புதிய திருப்பமாக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்தே சுமார் 50 ஆண்டு காலமாக அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும், இல்லையென்றால் அதற்கான பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம் என செங்கோட்டையன் கூறியதன் விளைவாக அவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து சில காலம் அமைதியாக இருந்த செங்கோட்டையன் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவிலிருந்து இன்னும் சிலர் தவெகவில் இணைய இருக்கிறார்கள்.

அந்த பணியை நான் செய்து முடிப்பேன் என்று கூறினார். அவர் கூறியதை போலவே, இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் சில அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் தான் அதிமுகவின் தற்போதைய கன்னியாகுமரி எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் தவெகவில் இணைந்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த இவர் தற்போது தவெகவில் இணைந்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleடிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த உதயநிதி ஸ்டாலின்.. கூட்டணிக்கு அச்சாரமிட்ட பேச்சு!!
Next articleநாஞ்சில் சம்பத் விஜய்யிடம் கேட்ட முக்கிய பொறுப்பு.. ராஜ் மோகனுக்கு புல்ஸ்டாப்!!