ADMK TVK: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில், பல்வேறு புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் விஜய்யின் அரசியல் வருகை. கட்சி துவங்கிய ஒன்றரை வருடங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தவெக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் விஜய்க்கு அரசியல் அனுபவம் தேவை, முதல் தேர்தலிலேயே வெல்ல முடியாது, முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ஆசைப்படுவது பேராசை என பலரும் கூறி வந்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு காரணம், தவெகவில் அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் யாரும் இல்லையென்பது தான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவில் 50ம் ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாமல், அரசியல் களத்தில் தொடர் வெற்றிகளை பதவி செய்து வந்தவர் என்ற பெருமைக்கும் உரியவர். ஆனால் இவர் புதிய கட்சியான தவெகவில் சேர்ந்தது அவர் அரசியல் வாழ்க்கையை முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக, விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஏனென்றால் அதிமுக ஒருங்கிணைய வேண்டும், அப்போது தான் தேர்தலில் வெற்றி பெற முடியுமென கூறிய செங்கோட்டையன் அந்த பணியை விட்டு விட்டு தவெகவில் இணைந்தது அவரது சுயநலதிற்க்காகவே என்ற கருத்து வலுப்பெறுகிறது. அது மட்டுமல்லாமல், அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்டு அவரது கட்சியில் இணைந்ததால் செங்கோட்டையனின் மதிப்பு குறைந்து விடும் என்று மதிப்பிடப்படுகிறது.

