ADMK DMK: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் அரங்கில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென முயற்சித்து வரும் வேளையில், தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென திமுக போராடி வருகிறது. இவ்வாறு அதிமுகவிற்கும், திமுகவிற்கும் போட்டி நிலவி வரும் சமயத்தில், அதிமுக மீண்டும் தோல்வியுறும் வகையில் சில நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டவர்கள் ஒரு அணியாக திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கட்சியின் முக்கிய முகமாகவும், கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக சார்பாக போட்டியிட்டு தொடர்ந்து வெற்றியை மட்டுமே பதிவு செய்து வந்த, செங்கோட்டையன் தவெகவில் இணைய போவதாக தகவல் வந்தது. இந்நிலையில், தனது எம்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்த செங்கோட்டையன், அதன் பிறகு இரண்டு முறை திமுகவின் மூத்த அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு தான் தற்போது ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. இவர் தவெக இணைவதற்கான சாத்திய கூறுகள் இருந்த பட்சத்தில் சேகர் பாபு உடனான உரையாடல் அவர் திமுகவில் இணைய போவதாகவே பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் காலூன்ற வேண்டுமென பல முயற்சிகளை கையில் எடுத்து வரும் திமுகவிற்கு செங்கோட்டையனின் இணைவு ஒரு தொடக்க புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஒருவேளை திமுகவில் இணைவது உறுதியானால் அது அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

