TVK BJP: 2026 தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு புதிய திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமான கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டும், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என கூறி வருகிறது. இது அனைவரது மத்தியிலும் சிரிப்பை வரவழைத்தது.
இது மட்டுமல்லாமல், பாஜக கொள்கை எதிரி என்றும், திமுக அரசியல் எதிரி என்றும் விஜய் கூறியது அவரது அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. விஜய் எதிரி என்று கூறிய இரண்டு கட்சிகளும் விஜய் விமர்சிக்காமல் இருந்தன. பின்னர் திமுக விஜய்யை மறைமுகமாக விமர்சிக்க ஆரம்பித்தது. ஆனால் பாஜக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல், அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் விஜய் தெளிவாக இருந்தார். தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு சிறிதளவும் இல்லாத காரணத்தினால், இங்க வலுப்பெற வேண்டுமென பாஜக முயற்சித்து வரும் சமயத்தில், இதற்கு தடையாக அதிமுக, திமுக இருக்கிறது.
இதனால் அதிமுக உடன் கூட்டணி அமைத்து அதனை பின்னுக்கு தள்ளிவிட்டு, திமுகவின் அரசியல் எதிரியாக வலம் வரவேண்டும் என்ற நோக்கில் பாஜக உள்ளது. இந்நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்தது, பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வெளியிலிருந்து விஜய்யை வீழ்த்த முடியாது என்பதை அறிந்த பாஜக, செங்கோட்டையன் மூலம் தவெகவை தரைமட்டமாக்க திட்டம் தீட்டி உள்ளது என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பாஜக சொல்லி தான் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தார் என்பது உறுதியாகிறது.

