சோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்!

Photo of author

By Hasini

சோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்!

ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கியுள்ள புதிய முயற்சி வரவேற்கத்தக்கது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் கூறியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியையும் அவர் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சிறு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இருபத்தி மூன்று பேர் சோனியா காந்திக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் கபில் சிபிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரும் 20ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் இதில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முகாந்தரமே மம்தா பானர்ஜி மற்றும் சோனியா காந்தியின் சந்திப்புதான் என்றும் சிலர் கருது தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் டெல்லி வந்த வங்கதேசத்து மங்கை எதிர்கட்சிகளை இணைத்து 2024 ம் ஆண்டு நமக்கு ஆதரவாக மாற்றுவோம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது குறிப்பிடத் தக்கது. மேலும் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மோடி ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்றும் ஒரு தரப்பு மக்கள் கூறி வருகின்றனர்.