இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்!

Photo of author

By Ammasi Manickam

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்!

இந்திய பங்கு சந்தை இதுவரை செல்லாத புதிய உச்சத்தை இன்று அடைந்தது. இதில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகள் என்ற இதுவரை செல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 12,086 என்ற நிலையில் வர்த்தகமானது. இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது. 

உலக அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சி, அமெரிக்கா – சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு இடையே, ஆசிய பங்குச் சந்தைகளை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதன் கிழமை வர்த்தக நேர துவங்கியதும் உயரத் தொடங்கின.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து இதுவரை செல்லாத புதிய உச்சத்தை எட்டி வர்த்தகமானது.இதனையடுத்து தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 80 புள்ளிகள் வரை அதிகரித்து 12 ஆயிரம் புள்ளிகளை கடந்து இன்று வர்த்தகமானது. மேலும் நிஃப்டியின் துறை சார்ந்த குறியீடுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கான குறியீடு இன்று அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.

இன்றைய பங்குச் சந்தை வியாபாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 1571 ரூபாயைத் தொட்டது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிக அதிகமாகும். இதன் மூலமாக 633 கோடி பங்குகளின் மொத்த விலையின் மூலம் அதன் பங்கு மூலதனம் 9.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

இதன் எதிரொலியாகவும் இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏறு முகமாக அமைந்தது. இதன் மூலமாக பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகளை கடந்தது. இதன் மூலமாக கடந்த காலங்களில் அடைந்த 40790 என்ற முந்தைய சாதனையை முறிடியத்தது.