நேற்று முடிந்த பங்கு சந்தை வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் தீடீரென்று இறக்கத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து வெளியான செய்திகள் அனைத்தும் இனி சந்தை இறங்கு முகமாகவே இருக்கும் என்று கணிப்புகளை வெளியிட்டன.
ஆனால் இன்று ஆரம்பித்த வர்த்தகத்தில் வெளியான செய்திகளின் எல்லா கணிப்புகளையும் பொய்யாக்கி, இந்திய பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் கம்பீரமாக ஏற்றதில் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 794 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணமாக சில நடவடிக்கைகளை கூறுகின்றனர். அதில் குறிப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், பங்குச் சந்தைகளில் கார்ப்பரேட் பாண்டுகளை வாங்கவுள்ளதாக வெளியான செய்தி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அடுத்ததாக சீனாவில் மறுபடியும் ஆரம்பித்த கொரோனா தொற்று மேலும் உயராமல் கட்டுக்குள் வந்துள்ளது. அடுத்ததாக
இந்த பாசிட்டிவ் செண்டிமெண்டால் உலக சந்தைகள் அனைத்தும் ஏற்றம் கண்டதால் இந்திய பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸும் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.