செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. உடனடியாக முடிவு கட்டுங்கள்!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
243
Senthil Balaji Bail Petition.. Make a quick decision!! High Court action order!!
Senthil Balaji Bail Petition.. Make a quick decision!! High Court action order!!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. உடனடியாக முடிவு கட்டுங்கள்!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பணமோசடி வழக்கில் அமலாக்க துறையால் கடந்த 2021 ஆண்டு கைது செய்யப்பட்ட திமுக, கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை.அவர் 2011 – 2016 ம் ஆண்டுக்கால கட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, சுமார் 81 நபர்களிடம் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் பெற்று ஏமாற்றியதாக அவர்மீது புகார் கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என அனைத்திலும் பல்வேறு தொடர் சோதனைகள் நடத்தப்பட்டது. இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதில் திமுக நிர்வாகிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.மேலும் இது மத்தியில் இருந்த மோடி அரசின் பழி வாங்கும் செயல் என திமுக குற்றம் சாட்டியது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது கூட அவர் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தார்.எதிர் கட்சிகள் அவர் பதவி விலக வேண்டுமென தமிழக அரசை விமர்சித்தன.

அதன் பிறகு அவர் தனது அமைச்சர் பதவியை ரஜினாமா செய்தார்.இந்த நிலையில் அவர் 3 முறை ஜாமீன் மனுவை தாக்கல் செய்தும் அவற்றை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.தொடர்ந்து 41 ஆவது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில், செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை 4 மாதங்களில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிக்க வேண்டும்.

மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டுமென கூறிள்ளார்.இதனால் இப்போதைக்கு செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியில் வர முடியதாதல் அவரது கரூர் மாவட்ட ஆதரவாளர்கள் சோகத்தில் இருப்பதாக தெரிகிறது.