ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வழக்கம் போல அதிமுகவும், திமுகவும் போட்டி போட தயாராகி விட்டன. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கி அதனை சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்ப்பதற்கான வேலைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் முன்னிலை பெறுவது திமுக என்றே கூறலாம். மற்ற கட்சிகளில் கூட தொண்டர்கள் தான் கட்சி மாறி வருகின்றனர்.
ஆனால் திமுகவில் மட்டும் அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சிங்காநல்லூர் தொகுதியில் 2006, 2011 யில் எம்எல்எ-வாக இருந்த சின்னசாமி இன்று திமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகுராஜா, போன்ற முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக சின்னசாமியும் திமுகவில் இணைந்திருப்பது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவையில் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் திமுக, இந்த முறை அங்கு வெற்றி பெற வேண்டும் என அந்த பகுதியை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்து விட்டது. இந்நிலையில் கோவையை மெல்ல மெல்ல திமுக வசம் கொண்டு வரும் செந்தில் பாலாஜி முதலில் அதிமுக அமைச்சர்களை திமுகவில் சேர்க்கும் பணியை கையில் எடுத்த நிலையில் அது தற்போது வெற்றி அடைந்துள்ளது. அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது பேசுபொருளாக நிலையில் தற்போது சின்னசாமியின் இணைவு அரசியல் அரங்கை ஆட்டம் காண வைத்துள்ளது.

