கரூர் மரணத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி.. வெளியானது திமுக சதி!!

0
670
Senthil Balaji in the background of Karur's death.. DMK conspiracy revealed!!
Senthil Balaji in the background of Karur's death.. DMK conspiracy revealed!!

DMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடித்த அவர் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர், நாமக்கல் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூரில் பிரச்சாரம் முடிந்த நிலையில் அங்கு 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் விஜய் மீதும், அவரது கட்சியின் மீதும் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. விஜய் தரப்பு வழக்​கறிஞர்களை வைத்து தான் பக்கம் உள்ள நியாயத்தை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசும் ஓய்வு பெற்ற நீதிபதியான அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் விஜய் தரப்பு இந்த விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த அசம்பாவிதத்திற்கு பின்னால் திமுகவின் கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக தவெக கூறியுள்ளது. செந்தில் பாலாஜி மீது வழக்கு நிலுவையில் உள்ள சமயத்தில் தன்னுடைய செல்வாக்கை கரூரில் நிலை நிறுத்தி விடலாம் என தவெக திட்டம் திட்டியதாகவும், அதனால் செந்தில் பாலாஜி இவ்வாறான சதி திட்டத்தை திட்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

செந்​தில்​ பாலாஜி சதி​யால் 41 பேர் உயி​ரிழந்​தனர். அதற்​கான ஆதா​ரங்​களை நீதிமன்றத்​தில் தாக்​கல் செய்​வோம் என்று தவெக தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் கரூர் பிரச்சாரத்தில் விஜய் செந்தில் பாலாஜியை பற்றி பேசியவுடன் கூட்டத்திலிருந்து செருப்பு வீசப்பட்டது இதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleகரூர் பெருந்துயரத்தில் ஆதாயம் தேடும் திமுக.. பேரிடரிலும் அரசியல்!!
Next articleதவெக தொண்டர்கள் தாக்கத்திற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி.. சீமான் குற்றச்சாட்டு.. திமுக கண்டனம்!!