இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பாக வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது இன்றைய தினம் நாமக்கல், ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நாளைய தினம் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நாளை மறுதினம் டெல்டா மாவட்டங்களான சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
எதிர்வரும் 24ஆம் தேதி விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு.
சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.