தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு நிலைமை இதுதான்!

0
184

தமிழ்நாட்டில் இன்றைய தினம் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை காண வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்த நிலையில், நாளையதினம் டெல்டா மாவட்டங்கள்,அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,, காரைக்கால், ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த நிகழ்வு நாளை மறுதினம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

எதிர்வரும் 25ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து அதற்கான வாய்ப்பிருக்கிறது. கடலோர மாவட்டங்களை ஒட்டி இருக்கின்ற உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு சமயங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்.

Previous articleதமிழகத்தில் இதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசு! உஷார் படுத்தப்படும் மாவட்ட ஆட்சியாளர்கள்!
Next articleஇதை செய்தால் இனி இதுதான் கதி! சென்னை மாநகராட்சி அதிரடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here