தமிழகத்தில் வெள்ளக்காடாக போகும் பகுதிகள்! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

0
183

தமிழ்நாட்டில் இன்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் ராயப்பேட்டை, திருவள்ளூர் ,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து அதற்கான வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எதிர்வரும் 25ஆம் தேதி கடலோர மாவட்டங்களிலும் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. 26 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Previous articleஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக!
Next articleதமிழக அரசு போட்ட உத்தரவால் கவலையில் குடிமகன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here