இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு!

0
233
Serial actress after reading this? Lucky opportunity given by Insta!
Serial actress after reading this? Lucky opportunity given by Insta!

இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு!

தொலைக்காட்சிகளில் நடிப்பவர்கள் கூட வெள்ளித்திரையில் நடிப்பவர்கள் போல மக்களிடையே மிகவும் பிரபலம் அடைகிறார்கள். அப்படி எல்லா தொடர்களிலும் உள்ள எல்லா நடிகர்களும் ஆகவில்லை என்றாலும், சில சீரியல்களில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதன் மூலம் சிலர் மக்களை கவர்கின்றனர். அப்படி ஒரு தொடர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நீதானே எந்தன் பொன்வசந்தம்.

இதில் வயது வித்தியாசத்தில் வரும் காதல் என்றாலும், அந்த காதல் ரசிக்கும் விதத்தில் இருப்பதால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் நடிகராக ஜெய் ஆகாஷ் நடித்து வருகிறார். அவர் முன்னணி ஹீரோவாகவும், துணை நடிகராகவும் நடித்து வந்தவர் ஆவார். இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தர்ஷனா. இவர் குன்னூரில் பிறந்தவராவார்.

மேலும் இவர் பல் மருத்துவமும் படித்துள்ளார். சென்னையில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சில போட்டோக்களை போடோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக கிடைத்த வாய்ப்பு தான் இந்த சீரியல் வாய்ப்பு என்று கூறியுள்ளார். இவருடைய தந்தை அசோகனும் ஒரு மருத்துவர்தான் என்றும் தகவல் தெரிவித்தார். தந்தையின் ஆசைக்காக தான் தர்ஷணா மருத்துவம் படித்ததாகவும், தனது ஆர்வம் நடிப்பு மீது தான் ஆசை என்றும் கூறினார்.

அதனால்தான் படிப்பை முடித்ததும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற கிளம்பிவிட்டார்.  இந்த தொடரின் மூலம் தமிழக மக்களிடம் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. வயது வித்தியாசக் காதல் என்றாலும் அந்த சீரியலில் வரும் அனு என்ற கதாபாத்திரத்தில் இவர் நடிப்பு ஒன்றிப் போய் விட்டது. கன்னடத்தில் பெருத்த வரவேற்பு பெற்ற ஜோதே ஜோதேயலி என்ற தொடரின் ரீமேக்தான் இந்த நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடர்  என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போது 300 எபிசோடுகளை கடந்து இந்த சீரியலில் கல்லூரி மாணவியாக அனுவின் கேரக்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. அனு – சூர்யாவின் காதல் கதைகளை ரசிப்பதற்காகவே இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் தர்ஷனா தனது  பள்ளி நாட்களில் ரசித்த டிவி தொடர் கனா காணும் காலங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் தர்ஷனாவிற்கு மாடலிங், போட்டோஷூட் மீது மிகுந்த ஆர்வம் என்றும் கூறியுள்ளார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். மேலும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் ஜாலி கொண்டாட்டங்களையும், போட்டோக்களையும், வீடியோக்களையும் தவறாமல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.

Previous articleதங்கத்தின் மீது வாங்கும் கடன் அதிகம்! வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!
Next articleஉங்கள் செல்போனில் சார்ஜ் வேகமாக குறைகிறதா? முதலில் இந்த ஆப்களை டெலிட் செய்யுங்கள்!!