ஏழு முறை தொடர்ந்து உணரப்பட்ட நிலநடுக்கம்! அச்சம் அடைந்த ஊர் மக்கள்!
வேலூர் அருகே இன்று அதிகாலை 4.17 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறி வெளியே வந்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி வரை இந்த நில அதிர்வு இன்று அதிகாலை நேரத்தில் லேசாக ஏற்பட்டது. லேசானாலும், கனமானாலும் நில அதிர்வு ஏற்பட்டதை நினைத்து மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
அதாவது வேலூரில் இருந்து சரியாக ஐம்பத்தி ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகவும் பதிவாகியுள்ளது. ஏற்கனவே பலமுறை வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஏனெனில் குஜராத்திலிருந்து ஆரம்பித்து திருபத்தூர் வரை பூமத்திய ரேகை நேர்கோடு என சொல்லப்படுகிறது.
அதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது சகஜம் தான் என ஒரு சிலர் கூறியுள்ளனர். குடியாத்தம், தட்டப்பாறை, மீனூர், கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஏழு முறை நில அதிர்வு உணரப்பட்டது என்றும் தெரிவித்தனர். அப்போது வீட்டின் பரண் மேல் இருந்த பாத்திரங்கள் எல்லாம் உருண்டு கீழே விழுந்துள்ளது. மேலும் பீரோக்கள் சில அடி தூரம் நகர்ந்து உள்ளன.
கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். பொதுவாகவே இயற்கை சீற்றம் வரப்போகிறது என்று வீட்டிலுள்ள கால்நடைகளுக்கு கண்டிப்பாக தெரியும். ஏனென்றால் அதெல்லாம் அந்த அளவுக்கு நுண்ணறிவு பெற்ற பிறப்புகள். எனவே கால்நடைகளும் தொடர்ந்து கத்தியபடியே இருந்துள்ளது.
காத்தாடிகளும் விநோதமாக சுற்றிக் கொண்டிருந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். சில நிமிடங்களுக்குப் பின் நில அதிர்வு நின்றது. ஆனால் தொடர்ந்து சில வினாடிகளுக்கு பின் மீண்டும், மீண்டும் என ஏழு முறை நில அதிர்வு உணரப்பட்டது என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு முறை சுமார் மூன்று வினாடிகள் வரை நில அதிர்வு நீடித்தது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த சமயத்தில் பயங்கரமாக சத்தம் ஏற்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களில் தற்போது மூன்றாவது முறையாக நில அதிர்வு கண்டறியப்பட்டுள்ளது. எனவே கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். அதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பெத்த திப்பபள்ளி அடுத்த சானுமா குலப்பள்ளி, பட்ட வான்ல பள்ளி ஆகிய கிராமங்களில் தொடர்ந்து 2 நாட்களாக நிலநடுக்கமும், பூமியில் இருந்து அதிக அளவு வினோத சத்தமும் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் தமிழக ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக, குறைக்க குறைக்க இயற்கை நமக்கு பெரிய பேரழிவுகளை கண்முன்னே காட்டிக் கொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக இயற்கை பொங்கி எழுந்து விட்டது என்று தான் கூற வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கோரோனா ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்தது.
தற்போது ஏற்படும் நிலச்சரிவு, நிலநடுக்கம், பெருமழை, வெள்ளம், சுனாமி, மேக வெடிப்பு உட்பட பல இயற்கை அழிவுகளையும் நம் கண்முன்னே கண்டு வருகிறோம். பூமியை அதுவே சுத்திகரித்து கொள்கிறது போல? நம்மை எல்லாம் வெளியேற்றி விட்டு என்றுதான் தோன்றுகிறது.