கேரளத்து சேச்சி தமிழகத்தின் அம்மாவான கதை!

0
264

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட நடிகை ஷகிலா மலையாள திரையுலகில் கவர்ச்சியில் உச்சபட்ச நடிகையாக வலம் வந்தவர் இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வருகை தந்தார். ஆனால் இவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இறுதியில் கவர்ச்சி நடிகையாகவே மாற்றியிருக்கிறார்கள் மலையாள திரையுலகினர்.

சகிலா மலையாளம் மட்டும் அல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அத்துடன் மட்டும் அல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆகவும் பங்கேற்றார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் மீதான ரசிகர்களுடைய பார்வை முற்றிலுமாக வேறுபட்டு காணப்பட்டது. ரசிகர்கள் அவரை எங்கே பார்த்தாலும் ஷகிலாவை அம்மா என அழைக்க ஆரம்பித்திருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் ஷகிலா கூறியிருக்கிறார்.

அதோடு இவர் தன்னுடைய வாழ்வை தனிமையிலேயே கழித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான நிலையில், இவர் ஒரு திருநங்கை பெண்ணை மகளாக தத்து எடுத்து வளர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதாக சொல்லப்படுகிறது.

Previous articleசசிகலாவை தலைமையேற்க அழைக்கும் அதிமுக தொண்டர்களால் பரபரப்பு!
Next articleநடிகை செய்த ட்வீட்! அரசு செய்யும் கொலை! கடுப்பான அரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here