தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தப்படும் மத்திய நிதிநிதியமைச்சர்தகவல்!

Photo of author

By Sakthi

தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தப்படும் மத்திய நிதிநிதியமைச்சர்தகவல்!

Sakthi

Updated on:

2022 மற்றும் 23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு,

போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும், நடப்பு நிதி ஆண்டில் 25000 கிலோ மீட்டர் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும், இந்த திட்டத்தின் கீழ் 3 வருடங்களில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும், மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கு தனியார் பங்களிப்புடன் திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்காக ஒரு தொடர் வண்டி நிலையம், ஒரு உற்பத்தி பொருள் திட்டம், கொண்டுவரப்படும் ஜந்தன் சக்தி திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 100 புதிய சரக்கு முனையங்கள் அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

44000 கோடியில் நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும், நீர்ப்பாசன இணைப்பு திட்டம் 46.605 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.