ADMK: பல வருடங்களாக அதிமுகவின் முன்னாள் மற்றும் மூத்த அமைச்சராக அறியப்பட்டு வருபவர் செல்லூர் ராஜு. இவர் சந்தித்த முதல் தேர்தலான 2011 சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தற்போது கூட்டுறவு அமைச்சராக உள்ளார். செல்லூர் ராஜு அண்மையில் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இது குறித்து பேசிய அவர், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் கட்சியிலிருந்து நீக்குவது தான் சரியான முடிவு என்றும் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் தான் அதிமுகவில் இருப்பவர்கள் செயல்பட வேண்டும், இந்த நேரத்தில் தனிப்பட்ட ஈகோகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமைக்கும் எனக்கும் கூட தான் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதனை எல்லாம் நான் ஊடகங்களிடம் சொல்ல முடியுமா? அதனை தனிப்பட்ட முறையில் தலைமையிடம் சொல்லி தீர்க்க வேண்டும் என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவரின் இந்த கருத்து, இபிஎஸ்க்கும், செல்லூர் ராஜுவுக்கும் இடையில் உள்ள கருத்து மோதலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதன் காரணமாக செல்லூர் ராஜுவும் கூடிய விரைவில் அதிமுகவிலிருந்து பிரியலாம் என்ற கருத்து வலுபெற்று வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு அணிகள் உள்ள நிலையில், செல்லூர் ராஜுவும் அதிமுகவிலிருந்து பிரிந்து விட்டால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக யாரும் எதிர் பார்த்திடாத அளவு தோல்வியை சந்திக்க நேரிடும்.

