சிஎஸ்கே ஐபிஎல் ஏலத்தில் தவற விட்ட அந்த வீரர்!! இரட்டை சதம் அடித்து சாதனை!!

Photo of author

By Sakthi

சிஎஸ்கே ஐபிஎல் ஏலத்தில் தவற விட்ட அந்த வீரர்!! இரட்டை சதம் அடித்து சாதனை!!

Sakthi

Shamir Rizvi scored a double century in the ODI series between Tripura and Baroda

Shamir Rizvi: ஷமிர் ரிஸ்வி  திரிபுரா மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்து இருக்கிறார்.

2025 ஆம் ஆண்டு  ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீப காலத்திற்கு முன் நடைபெற்றது. இதில் 23 வயதாகும் இளம் வீரர் ஷமிர் ரிஸ்வினை டெல்லி அணி 95 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. இதற்கு முன் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்தார். ஐபிஎல் ஏலத்தில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் “ஷமிர் ரிஸ்வி” பெயர் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் தொனி அவர்களின் ஓய்வுக்கு பிறகு இவர்தான் கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதி நிர்ணயிக்கும்  திறன் கொண்டவராக இருப்பார் எனக் கருதப்பட்டது. உள்ளூர் ஆட்டங்களில் மிகவும் சிறப்பாக விளையாடியதால்   இவர் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்தது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் தக்க வைக்கப்படும் 5  வீரர்கள் பட்டியலில்  “ஷமிர் ரிஸ்வி”  பெயர் இடம் பெறவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதிச பதிரனா, ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி ஆகியோர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது  “ஷமிர் ரிஸ்வி”  டெல்லி அணியில் இருக்கிறார். இந்த நிலையில் 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான ஒருநாள் தொடர் போட்டியில் பரோடா அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

இவர் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்து இருக்கிறார்.  அவருக்கு எதிராக வீசப்பட 97 பந்துகளில் 20 சிக்ஸர், 13 பவுண்டரிகளை குவித்து இருக்கிறார். மொத்தம் 201 ரன்கள் அடித்து இருக்கிறார். ஒரு நல்ல விளையாட்டு வீரனை சிஎஸ்கே தவற விட்டு விட்டது ரசிகர்கள் தெரிவித்து வருகிறர்கள்.