60 மாணவர்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! பள்ளி வளாகத்திற்கு வைக்கப்பட்ட சீல்!

0
120

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது.

அதேநேரம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இதுவரையில் திறக்கப்படாமல் இருக்கிறது, அவர்களுக்கு நோய் தொற்று எளிதில் தொற்றக் கூடும் என்ற சூழ்நிலை இருப்பதால், இந்த விஷயத்தில் மாநில அரசு சற்றே யோசித்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்று நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கர்நாடக மாநிலத்தில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், பெங்களூரு அருகே அனேகல் என்ற பகுதியில் இருக்கின்ற தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து அந்த பள்ளி விடுதியில் தங்கியிருந்த சுமார் 400க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் அடிப்படையில் 60 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பள்ளி வளாகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது அந்த பள்ளியின் மாணவர்கள் எல்லோரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

நோய்தொற்று பாதிப்புக்கு ஆளான மாணவர்களும், விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் இருவரும் இரண்டு தடுப்பூசிகளையும், செலுத்தி இருந்ததால் அவர்கள் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விடுபட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Previous articleவாக்குச் சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்! தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!
Next article1 முதல் 8 வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!