மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில் குடியரசு தின விழாவிற்காக அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 2518 ராணுவ வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், சுமார் 287 பேருக்கு தொற்று உறுதியாக இருப்பதாக தெரிகிறது. ஆனாலும் அவர்கள் எல்லோரும் அறிகுறி இல்லாத தொற்றினால் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
குடியரசு தின விழாவில் பங்கேற்று 7 முதல் 10 நாட்களுக்குள் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை அடுத்து அவர்கள் எல்லோரும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், தொற்று குணமான பிறகு அவர்களுடைய வழக்கமான பணிகளுக்கு அவர்கள் மறுபடியும் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .அதோடு முக கவசம் போன்ற கொரோனா தொற்றுக்கான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.