நாட்டில் சென்ற சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில், இதில் நேற்றைய தினம் அதிரடி மாற்றம் நிகழ்ந்தது.
தினசரி நோய் தொற்று பாதிப்பு 7000க்கும் கீழே சென்றது. இந்த சூழ்நிலையில், நாட்டில் ஒரே நாளில் 8,822 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 8084 பேருக்கும், நேற்றைய தினம் 6,594 பேருக்கும், நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த பாதிப்பானது இன்றைய தினம் 8,822 என அதிகரித்திருக்கிறது.
நாட்டில் நோய் தொற்று பாதிப்பு 4,32,36,695லிருந்து 4,32,45,517 என அதிகரித்திருக்கிறது. நாட்டில் ஒரே நாளில் 5,718 பேர் நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.
நாட்டில் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 4,26,61,370லிருந்து 4,26,67,088 என அதிகரித்திருக்கிறது. நாட்டில் நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
அதோடு இதுவரையில் இந்த நோய்த் தொற்று பரவல் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,792 என இருக்கிறது.
நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50,548லிருந்து 53,637 என அதிகரித்திருக்கிறது.
இதுவரையில் 195.50 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஒரே நாளில் 13,58,607 நோய்தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.