இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!! உச்சம் தொட்ட பூண்டு விலை!!

Photo of author

By Jeevitha

நாம் தினம்தோரும் எடுத்துக்கொள்ளும் உணவே நமக்கு நன்மை மற்றும் தீங்கு தரும். உண்ணும் உணவே மருந்து என கூறுவார்கள். அதற்கு முக்கிய காரணம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வெங்காயம், பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, மற்றும் நிறைய பொருட்கள். நாம் தினம் தோறும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் வெங்காயம் விலை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்தது. அதனை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. பூண்டு பொதுவாக சந்தைகளுக்கு நீலகிரி, திண்டுக்கல், போன்ற மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. ஆனால் அதிக அளவில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வருகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டுக்கு பூண்டு வரத்து குறைய தொடங்கி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பூண்டு அறுவடை ஜனவரி மாதத்தில் நடைபெறுவது ஆகும். இதனால் பூண்டு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையாகிறது. மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.500 வரை விற்பனை செய்து உச்சத்தை தொட்டுள்ளது.

இதனால் மக்கள் பூண்டு விலை உயர்ந்து வருவதை எண்ணி அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பூண்டு உணவில் செய்துகொள்வதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சளி மற்றும் இருமல் அறிகுறிகள் கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் அதிக கால்சியம் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.