யோவ் விழுந்தா விழுந்துரும்யா! கீழே விழுந்த விக்கால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

0
145

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருமணம் நிச்சயம் செய்த தேதியில் மணமகனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஊர்வலமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது ஊர்வலத்தில் வந்த மாப்பிள்ளை மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் தலையில் வைத்திருந்த விக் கழன்று விழுந்தது.

இதன் காரணமாக. மாப்பிள்ளை வழுக்கைத்தலை என்ற உண்மை பெண்ணின் குடும்பத்திற்கும், மணப்பெண்ணுக்கும், தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த உண்மையை தெரிந்து கொண்ட மணப்பெண் வழுக்கை தலை உள்ளவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்திருக்கிறார்.

அவருடைய பெற்றோர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் அவருடைய முடிவில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, நடக்கவிருந்த திருமணம் கடைசி கட்டத்தில் நின்றுபோனது. இதனைத்தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இதற்கு முன்பே மணமகனின் வழுக்கை தொடர்பாக தெரிந்திருந்தால் மனதளவில் பெண்ணை தயார் செய்திருப்போம் ஆனால் அவர்கள் அதனை மறைத்தது நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டது என்று பெண்ணின் உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Previous articleவீண் விளம்பரத்தை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த முக்கிய கிரிக்கெட் வீரர்!
Next articleசமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மானியம்! இதை பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!