மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு:! 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு!

Photo of author

By Pavithra

மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு:! 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சக்தி மெயின் ரோட்டில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி 4 பேர் பயணித்த கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த காரில் பிளிச்சி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரும்,தொண்டாமுத்தூரை சேர்ந்த ராஜன் என்பவரும், வீரகேரளம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவரும்,
காளியகவுண்டன் பாளையத்தை சேர்ந்த அரவிந்த் என்பவரும் காரில் பயணித்தனர்.இதில் அரவிந்த் என்பவர் காரை ஓட்டி வந்தார்.

இதேபோன்று சிறுமுகையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி மற்றொரு கார் சென்றது.இந்த காரில் மூன்று நபர்கள் பயணம் செய்தனர்.இந்த இரண்டு கார்களும் சிறுமுகை ரங்கம்பாளையம் ஐயப்பன் கோவில் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கி கொண்டிருந்தவர்களை,
அவ்வழியாக சென்றவர்கள் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சத்தியமங்கலத்திலிருந்து கோவை நோக்கி வந்த காரில் பயணம் செய்த நான்கு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மற்றொரு காரில் வந்த மூன்று நபர்கள் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு படுகாயமடைந்த மூன்று நபர்களையும் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.