Chennai: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
வீட்டு பயன்பாட்டிற்கு மற்றும் வணிக பயன்பாட்டிற்கு கேஸ் சிலிண்டர் பயன்படுகிறது. மக்கள் பெரும்பாலும் விறகு அடுப்பு பயன்படுத்துவதில்லை. இந்த காலகட்டத்தில் அனைவரும் கேஸ் சிலிண்டர் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கான காரணம் நம் தமிழக அரசே. ஏனெனில் விறகு அடுப்பு பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது.
அது மட்டும் அல்லாமல் மக்களுக்கு மறைமுகமாக பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதாவது விறகு எரிக்கும் போது அதில் இருந்து வரும் புகை கார்பன்-மோனாக்சைடு அது விஷவாயு. அதனால் தான் மக்களுக்கு அந்த புகையால் கண் எரிகிறது. இதனை தடுக்கும் வகையில் தான் அரசு கேஸ் சிலிண்டர் அறிமுகப்படுத்தியது. இது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த போதிலும் அதன் விலை மக்களுக்கு பிரச்சனையாக இருந்தது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் விலையில் மாற்றம் ஏற்படும் அந்த வகையில் இந்த மாதமும் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை 61 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1964.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் வீட்டு சிலிண்டர் விலை கடந்த மாதம், 818.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த மாதம் அதன் விலை மாற்றம் செய்யப்படாமல் அதே விலையை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் வணிக சிலிண்டர் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.