பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
125
Shocking news released by the United States on the death of the famous photographer!
Shocking news released by the United States on the death of the famous photographer!

பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தற்போதுள்ள உலக நிலவரத்தில் உலகமே போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதுமே கொரோனா தொற்றினால் போராடிக்கொண்டிருக்கிறது. அதனுள் உட்கட்சிப் பூசல் மற்றும் மதவாத, தீவிரவாத அமைப்புகள் என பல்வேறு கட்டமைப்பு களினாலும் உலக நாடுகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிராக அந்நாட்டில் தலிபான்கள் என்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசு ராணுவ வீரர்களையும் பயன்படுத்தி வருகிறது. இது அனைத்தும் நாம் அறிந்த விஷயமே. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில்  கந்தகாரில் நடந்த தலிபான்களுக்கு எதிரான போரில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் இறந்து விட்டார் என கடந்த 16ஆம் தேதி செய்திகள் வெளிவந்தன.

38 வயதான தனிஷ்க் சித்திக் இந்தியாவை சேர்ந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் ஆவார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் முதற்கொண்டு உலகத்திலுள்ள பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அவர் எடுத்த புகைப்படங்கள் மக்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்ததாக இருந்தது. கொரோனாவின் இரண்டாவது அலையில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்பட்டது உட்பட அவர் எடுத்த புகைப்படங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமானவை.

ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயர வாழ்வு குறித்தும் அவர் புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்காக உயரிய விருதான புலிட்சர் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு உலகம் முழுவதிலும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் பத்திரிகையாளர் சங்கம் இது பற்றி விசாரணை நடத்த கோரி மனு ஒன்றைக் கொடுத்து இருந்தது. இந்நிலையில் புகைப்பட செய்தியாளர் மரணத்தில் தங்கள் பங்கு எதுவும் இல்லை எனவும், அவர் உயிர் நீக்க நாங்கள் காரணம் இல்லை எனவும் தலிபான்கள் தெரிவித்தனர்.

இருதரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் எவ்வாறு பலியாகினர் என்பது கூட எங்களுக்கு தெரியாது என்றும், அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறியிருந்தார். மேலும் போர்க்களத்திற்கு வரும்போது பத்திரிக்கையாளர்கள் தங்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று, தங்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தால், அவ்வாறு நடந்து இருக்காது என்றும், அவர்களை பத்திரமாக பார்த்து கூட்டி சென்று இருப்போம் என்றும் கூறினார்கள்.

இதனால் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருடன் செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக்கின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் அவர் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார் என அமெரிக்காவில் இருந்து அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கந்தகார் நகரின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களை படம் பிடிக்கச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டில் பலியானார் என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படவில்லை அவரை நன்கு தெரிந்துகொண்ட பின்னரே தலிபான்கள் கொடூரமாக கொலை செய்து உள்ளனர் என்றும், அமெரிக்கப் பத்திரிகையான வாஷிங்டன் எக்ஸாமினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும்  அந்த செய்தியில் போரில் தலிபான்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து உள்ளனர். சித்திக் மற்றும் மூன்று ஆப்கன் படையைச் சேர்ந்த வீரர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் இதில் காயம் அடைந்த சித்திக் முதல்உதவிக்காக  அருகில் இருந்த மசூதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அப்போது சித்திக் மசூதியில் இருக்கும் விஷயம் அறிந்த தலிபான்கள், அவரை பிடித்து அவருடைய அடையாளத்தை உறுதி செய்து கொண்ட பின்னரே அவரது தலையில் தாக்கியதுடன், உடலை குண்டுகளால் துளைத்தெடுத்தனர். ஆனால் தலிபான்கள் விசாரணையின்போது மசூதியை மட்டுமே தாக்கியதாக கூறி உள்ளனர் என்றும் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் தலிபான்கள் மசூதியில் சித்திக்கை பிடித்தபோது அவர் உயிரோடு இருந்ததாகவும், சித்திக்கின் அடையாளத்தை சரி பார்த்து அதன் பின்னரே அவரை தூக்கிலிட்டதாகவும்  கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற முயன்ற ஆப்கன் படை தளபதியும் அவரது குழுவில் மீதம் உள்ளவர்களும் கூட இந்நிகழ்வில் உயிரிழந்துள்ளனர். பொதுவெளியில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் சித்திக்கின் முகம் அடையாளம் தெரிந்து, இருந்தாலும் கிடைத்த பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், அவரைத் துன்புறுத்திக் கொலை செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ரூபின் என்பவரும் உறுதி செய்துள்ளார். தலிபான்கள் பிடித்தபோது அவர் உயிரோடு இருந்துள்ளார் என்றும் அவர் என்று தெரிந்த பின்புதான் படுகொலை செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Previous articleCBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!! 99.37 % மாணவர்கள் தேர்ச்சி!!
Next articleகுலோசிங் பெல்: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிந்தது!! VIX 1.10%சரிவு!! சன் பர்மா லாபத்தில் முதலிடம்!!