பிரியாணி பிரியர்களை கவரும் கடை!! ஐந்து பைசா பிரியாணி!! அலைமோதும் மக்கள் கூட்டம்!!
பிரியாணி என்றாலே பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாகவே இருக்கிறது. பிரியாணி பிரியர்கள் பிரியாணி சாப்பிடுவதற்காக இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று பிரியாணியை ருசிப்பார்கள்.
மேலும் பிரியாணி சாப்பிடுவதற்காக சேலஞ்ச் செய்து பிரியாணியை ருசிப்பார்கள். பக்கெட் பிரியாணி சேலஞ்ச் போன்ற பல்வேறு பிரியாணி சேலஞ்ச்களை யூட்யூபில் பலரும் செய்து வருகின்றனர். பிரியாணி ஆனது தற்போது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக மாறிவிட்டது. ஏதேனும் விசேசங்களில் மெனுவில் முதலில் இருக்கும் உணவே பிரியாணி தான். காக்கா பிரியாணியில் ஆரம்பித்து தற்போது பக்கெட் பிரியாணி, வான்கோழி பிரியாணி, தம் பிரியாணி என பல்வேறு வகையான பிரியாணிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
பிரியாணியை மூங்கில் குச்சியையில் உள்ளே போட்டு வேகவைத்து விற்பனை செய்து வருகின்றனர். இது தற்போது மிகவும் பிரபலமான பிரியாணி செய்யும் முறைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் இவையெல்லாம் சிறிது விலை உயர்வாகவே விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் உள்ள கடை ஒன்றில் 5 பைசாவுக்கு பிரியாணி விற்கப்படுகிறது.மதுரை செல்லூர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட கடை ஒன்றில் விளம்பர நோக்கிற்காக ஐந்து பைசாவிற்கு பிரியாணி விற்கப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் கூட்டம் அந்த கடையின் முன்பு அலைமோதி வருகிறது. திடீரென்று குவிந்த மக்கள் கூட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உருவானது.
மேலும் கொரோனா தோற்று பரவல் விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு போலீசார்கள் குவிந்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பிரியாணியை விற்பனை செய்ததால் ஐந்து பைசா பிரியாணி கடைக்கு போலீஸ் சீல் வைத்தது. புதிதாக கடை திறந்து விளம்பரத்திற்காக செய்யப்பட்ட இந்த ஐந்து பைசா பிரியாணி பொட்டலங்களை போலீஸ் பறிமுதல் செய்தது. புதிய கடை திறந்து மக்கள் கூட்டம் வருவதற்காக விளம்பரம் செய்து ஐந்து பைசாவுக்கு பிரியாணி விற்ற இந்த கடை மக்கள் கூட்டம் கூறியதன் காரணமாகவே மூடப்பட்டது.