இரயிலில் இருக்குமிடத்தில் உணவு வர வேண்டுமா? அப்போ ஒரு SMS செய்தால் போதும்! 

Photo of author

By Sakthi

இரயிலில் இருக்குமிடத்தில் உணவு வர வேண்டுமா? அப்போ ஒரு SMS செய்தால் போதும்!
இரயில் பயணத்தின் பொழுது நாம் அமர்ந்திருக்கும் இடத்திற்கே உணவு வர வேண்டும் என்றால் அதற்கு உதவும் வகையில் இரயில்வேயில் ஒரு வசதி உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதாவது எஸ்.எம்.எஸ் ஒன்று மட்டும் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கு உணவு தேடி வரும்.
நீண்ட தூரமாக பயணம் செய்ய விரும்புவர்கள் அனைவரும் இரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அவ்வாறு இரயில் பயணத்தின் பொழுது ஒரு சிலர் சாப்பிட அவர்களே உணவை தயார் செய்து எடுத்து வந்துவிடுவார்கள். ஒரு சிலர் பயணத்தின் பொழுது இரயிலில் வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டு வருவார்கள்.
அவ்வாறு இரயிலில் வாங்கி சாப்பிடும் பொழுது ஒரு சில சமயங்களில் ஒரு சிலருக்கு இரயிலில் விற்பனை செய்யப்படும் உணவுகள் பிடிக்காமல் இருக்கலாம். அல்லது இரயில் நிலையங்களில் இரயில் நின்ற பின்னர் வாங்கி சாப்பிடலாம் என்றும் கூட நினைத்து இரயில் நின்ற பின்னர் இரயில் நிலையங்களில் வாங்கி சாப்பிடும் உணவுகள் கூட பிடிக்காமல் இருக்கலாம். அவ்வாறான சூழ்நிலையில் பயணிகள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே உணவை வாங்கி சாப்பிடும் வசதி ஒன்று இரயில்வே துறையில் இருக்கின்றது.
நீங்கள் இருக்கும் இடத்திலேயே உணவு உங்கள் கைக்கு வருவதற்கு உங்கள் மொபைல் போன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் டெக்ஸ்ட் மெசேஜ் என்பதை தேர்வு செய்து பின்னர் அதில் MEAL என்று டைப் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் இடைவெளி விட்டு உங்கள் பயணச்சீட்டின் PNR எண்ணை அதில் டைப் செய்ய வேண்டும். இறுதியாக இந்த மெசேஜ்ஜை 139 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் இடத்திற்கே உணவு கொண்டு வந்து தரப்படும்.